sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தங்க நகையை தவறவிட்ட பெண் துாய்மை பணியாளரால் ஒப்படைப்பு

/

தங்க நகையை தவறவிட்ட பெண் துாய்மை பணியாளரால் ஒப்படைப்பு

தங்க நகையை தவறவிட்ட பெண் துாய்மை பணியாளரால் ஒப்படைப்பு

தங்க நகையை தவறவிட்ட பெண் துாய்மை பணியாளரால் ஒப்படைப்பு


ADDED : பிப் 16, 2025 03:28 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, அத்தனுாரை சேர்ந்தவர் சங்கீதா; இவர், நேற்று காலை, துணி எடுப்பதற்காக வெண்ணந்துாரில் உள்ள ஜவுளி கடைக்கு சென்றார். அங்கு துணியை எடுத்துக்-கொண்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது, கைப்பையில் வைத்-திருந்த, 5.5 பவுன் நகையை பையுடன் காணவில்லை. அதிர்ச்சிய-டைந்த அவர் எங்கு தேடியும் கிடைக்காததால், வெண்ணந்துார் போலீசில் புகாரளித்தார்.

இந்நிலையில், வெண்ணந்துார் அண்ணாதுரை சிலை அருகே உள்ள பகுதியில், டவுன் பஞ்.,ல் துாய்மை பணியாளராக பணிபு-ரியும் ராதாமணி என்பவர், துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கீழே கிடந்த கைப்பையை எடுத்துள்ளார். அதில், தங்க செயின் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடி-யாக, வெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷன் சென்ற ராதாமணி, அந்த கைப்பையை போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து, ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார், வெண்ணந்துார் இன்ஸ்-பெக்டர் சுகவனம் முன்னிலையில், நகையை தவறவிட்ட சங்கீதா-விடம் ஒப்படைத்தனர். மேலும், கீழே கிடந்த நகையை உரியவ-ரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளர் ராதாமணியை பாராட்-டினர்.






      Dinamalar
      Follow us