/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெளுத்து கட்டிய மழை: வேளாண் பணி பாதிப்பு
/
வெளுத்து கட்டிய மழை: வேளாண் பணி பாதிப்பு
ADDED : ஜூலை 15, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான முத்துக்காளிப்பட்டி, ஆர்.புதுப்
பாளையம், கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், ராசிபுரம் நகர், காக்காவேரி, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை காற்றுடன் கனமழை பெய்தது.
அதுமட்டுமின்றி இரவு முழுவதும் துாறலுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், வயல்வெளிகளில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இதனால், உழவுப்பணி, களை எடுப்பு, மருந்து அடித்தல் உள்ளிட்ட வேளாண் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதேபோல், கட்டுமான பணிகளும் பாதிக்கப்பட்டன.