/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோட்டில் கொட்டி தீர்த்த மழை மாவட்டம் முழுவதும் 195.80 மி.மீ., பதிவு

ADDED : செப் 20, 2025 01:52 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும், இரவில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், வெயிலில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதையடுத்து, மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், நேற்று மாலை, 5:00 மணிக்கு, வானில் கருமேகம் சூழ்ந்தது. தொடர்ந்து, 5:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. லேசாக துவங்கி பின் கனமழையாக மாறியது. மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, பரமத்தி சாலை, சேலம் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் பரவலமாக மழை பெய்தது. மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்து காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று முன்தினம் காலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை, 24 மணி நேரம் பெய்த மழையளவு (மி.மீ.,) பின்வருமாறு:
எருமப்பட்டி, 15, குமாரபாளையம், 9.60, மங்களபுரம், 16.20, மோகனுார், 8, நாமக்கல், 8, ப.வேலுார், 14, புதுச்சத்திரம், 12, ராசிபுரம், 32, சேந்தமங்கலம், 23, திருச்செங்கோடு, 34, கலெக்டர் அலுவலகம், 6, கொல்லிமலை, 18 என, மொத்தம், 195.80 மி.மீ., மழை பெய்தது.