/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சூறாவளியுடன் கனமழை சேந்தமங்கலத்தில் 'கரன்ட் கட்'
/
சூறாவளியுடன் கனமழை சேந்தமங்கலத்தில் 'கரன்ட் கட்'
ADDED : அக் 05, 2024 01:09 AM
சூறாவளியுடன் கனமழை
சேந்தமங்கலத்தில் 'கரன்ட் கட்'
சேந்தமங்கலம், அக். 5-
சேந்தமங்கலம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், மின் கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்து, மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
நாமக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று மாலை மேக மூட்டமாக காணப்பட்டது. அதன்பின் வீசிய காற்றால், மேகமூட்டம் நகர்ந்து கொல்லிமலை அடிவாரப்பகுதிக்கு சென்றன. பின், சேந்தமங்கலம், துத்திக்குளம், காரவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மாலை, 5:00 மணிக்கு துவங்கிய மழை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.
இதனால், சேந்தமங்கலம் - காந்திபுரம் சாலை, லட்சுமி தியோட்டர் பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை குறைந்ததும், போக்குவரத்து சீரானது. படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர்.