/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோட்டில் வீரவணக்க பேரணி
/
திருச்செங்கோட்டில் வீரவணக்க பேரணி
ADDED : ஜூலை 06, 2025 12:52 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில், விவசாயிகளின் உரிமைக்காக போராடியவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வீரவணக்க பேரணி நடந்தது.
நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயமணி தலைமை வகித்தார். பொன்னி கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
பேரணி, பரமத்தி வேலுார் ரோடு, வாலரைகேட் அருகே துவங்கி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் முடிவடைந்தது.
மாநில அரசின் திட்டமாக உள்ள வேளாண் உரிமை மின்சார திட்டத்தை இனிமேல் ரத்து செய்ய முடியாதபடி சட்டம் இயற்ற வேண்டும். வேளாண் உரிமை மின் திட்டத்தில் இணைப்புக்கு காத்து இருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். கள் இறக்கி விற்க உள்ள தடையை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும். திருமணிமுத்தாறு திட்டம் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.