/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பூச்சிகளை விரட்ட அரப்பு மோர் பயன்படுத்த யோசனை
/
பூச்சிகளை விரட்ட அரப்பு மோர் பயன்படுத்த யோசனை
ADDED : ஆக 07, 2025 01:36 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை வேளாண் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை, 2 கிலோ அளவில் பறித்துக்கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும். இதிலிருந்து, 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். பின்னர் இந்த கரைசல் கலவையை மண்பானையில் ஒரு வார காலத்துக்கு புளிக்கவிட வேண்டும். ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன், 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம்.
அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் மூலம், இரண்டு விதமான பலன்கள் கிடைக்கும். அதாவது, அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் துார ஓடிவிடும். குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.
அரப்பு மோர் கரைசலை பூப்பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.