/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு விதிப்படி தார் சாலை அமைக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்'
/
அரசு விதிப்படி தார் சாலை அமைக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்'
அரசு விதிப்படி தார் சாலை அமைக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்'
அரசு விதிப்படி தார் சாலை அமைக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்'
ADDED : செப் 06, 2025 01:46 AM
ப.வேலுார் :'அரசு விதிகள்படி தார் சாலை அமைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என, ப.வேலுார் டவுன் பஞ்., 17வது வார்டு, பா.ம.க., கவுன்சிலர் சுகந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ப.வேலுார் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராக உள்ளார். இந்நிலையில், ப.வேலுார், 17வது வார்டு, தெற்கு தெரு, மாரியம்மன் கோவில், செட்டியார் தெரு ஆகிய பகுதிகளில், 1.62 கோடி ரூபாயில் தார் சாலை அமைக்கும் பணி, நேற்று துவங்கியது. அப்பகுதியில் இருபுறமும் உள்ள சாக்கடை வரை சாலை அமைக்கவும், ஏற்கனவே இருக்கும் பழைய தார் சாலையை அகற்றிவிட்டு, புதிய தார் சாலை போட வேண்டும் என்பதே விதிமுறையாகும். ஆனால், அதில் இருக்கும் பழைய தார் சாலையை அகற்றாமலேயே பழைய தார் சாலையை பெயர்த்து, அதன் மீதே சாலை அமைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், சாலை உயரம் அதிகமாகி குடியிருப்பு வீடுகள் பள்ளமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தார் சாலையில் பாயும் தண்ணீர், குடியிருப்புகளுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஒப்பந்ததாரர் ரமேஷிடம் கேட்டபோது, ''ப.வேலுார் டவுன் பஞ்., அதிகாரிகள் கூறியபடி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இருபுறம் உள்ள சாக்கடை வரை சாலை அமைக்க வேண்டுமானால், அப்பகுதியில் உள்ள அக்கிரமிப்புகளை டவுன் பஞ்., நிர்வாகம் அகற்றி தர வேண்டும். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற, பொதுமக்களிடம் டவுன் பஞ்., நிர்வாகம் எந்தவித தகவலும் தரவில்லை.
அதனால், தற்போது இருக்கும் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேற்கொண்டு இது குறித்து இளநிலை செயற்பொறியாளர் வீரமணியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்,'' என்றார்.இதுகுறித்து, 17வது வார்டு கவுன்சிலர், பா.ம.க., சுகந்தி கூறுகையில், ''பழைய தார் சாலையை அகற்றாமலேயே, பெயரளவிற்கு தார் சாலை பணி நடந்து வருகிறது. பழைய தார் சாலையை முழுவதுமாக அகற்றிவிட்டு, அரசு விதிப்படி புதிய தார் சாலை தரமாக அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.