/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநில கலைத்திருவிழா கலெக்டர் துவக்கி வைப்பு
/
மாநில கலைத்திருவிழா கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 04, 2025 01:31 AM
திருச்செங்கோடு, ஜன. 4-
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன வளாகத்தில், மாநில அளவிலான அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு கலைத்திருவிழா போட்டி, நேற்று துவங்கியது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார், திட்டம் குறித்து விளக்கி பேசினார். எம்.பி., மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். தமிழகம் முழுவதும், 38 கல்வி மாவட்டங்களில் இருந்து, 3,747 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, கே.எஸ்.ஆர்., கல்லுாரி வளாகத்தில், 18 அரங்குகளில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்களது திறமைகளை காண்பித்தனர். இதில், வெற்றி பெறும் மாணவ, மாணவியர் சென்னையில் நடக்க உள்ள பரிசளிப்பு விழாவில் பங்கேற்பர். நிகழ்ச்சியின் தொடக்கமாக, மதுரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்ற குழு நாட்டியம் நடந்தது. மண்டல நகர அமைப்பு திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி
சுரேஷ்பாபு, திருச்செங்கோடு ஒன்றிய தலைவர் சுஜாதா
தங்கவேல் உள்பட பலர்
கலந்துகொண்டனர்.