/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரும்பில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரிப்பு; வழிகாட்டு முறையை கடைப்பிடிக்க 'டிப்ஸ்'
/
கரும்பில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரிப்பு; வழிகாட்டு முறையை கடைப்பிடிக்க 'டிப்ஸ்'
கரும்பில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரிப்பு; வழிகாட்டு முறையை கடைப்பிடிக்க 'டிப்ஸ்'
கரும்பில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரிப்பு; வழிகாட்டு முறையை கடைப்பிடிக்க 'டிப்ஸ்'
ADDED : ஜூன் 01, 2024 06:28 AM
நாமக்கல் : 'கரும்பில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, வழிகாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:திருச்செங்கோடு வட்டாரத்தில், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் ரவி, வேளாண் துணை இயக்குனர் கவிதா தலைமையில் வேளாண் துறையினர், கரும்பு வயலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கரும்பில் மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அதிக வெப்பத்தைத் தொடர்ந்து மழை பெய்துள்ளதால், சீதோஷ்ண நிலை மாவுப்பூச்சியின் பெருக்கத்திற்கு சாதகமாக உள்ளது.மாவுப்பூச்சி தாக்கப்பட்ட வயல்களில் பயிரின் வளர்ச்சி குன்றியுள்ளது. மேலும், நுண்சத்து பற்றாக்குறையும் உள்ளது. அதனால், கரும்பில் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, விவசாயிகள் கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பூச்சி நோய் தாக்குதல் இல்லாத வயல்களில் விதைக்கரணை தேர்வு செய்ய வேண்டும். ஏக்கருக்கு, 20 கிலோ நுண்ணுாட்டச்சத்து, இரண்டு தவணைகளில் இட வேண்டும். தோகை உரித்து வயல்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். அதிக நீர் பாய்ச்சுவதையும், அதிக உரம் இடுவதையும் தவிர்க்க வேண்டும். மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, மீன் அமிலம் தெளித்தல் அல்லது தையோமெத்தாக்சிம், 10 லிட்டர் தண்ணீருக்கு, 6 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.