ADDED : நவ 20, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் இந்திராவின், 108-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் அண்ணாதுரை சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராவின் படத்திற்கு, கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலை
மையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு சர்க்கரை பெங்கல் வழங்கப்பட்டது. மாநகர காங்., தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

