/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சர்வதேச குழந்தைகள் தின ஆரி, தையல், ஓவிய போட்டி
/
சர்வதேச குழந்தைகள் தின ஆரி, தையல், ஓவிய போட்டி
ADDED : நவ 17, 2025 04:07 AM
நாமக்கல்: இந்திய மற்றும் சர்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி, நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில், தையல், ஆரி, ஓவியம் வரைதல், அழகுக்கலை போட்டி நேற்று நடந்தது.
இந்திய ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், நோபல் உலக சாதனை நிகழ்ச்சியாக நடந்த இப்போட்டியை, கூட்டமைப்பின் தேசிய தலைவர் அரவிந்த் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 305 பெண்கள், ஆரி, தையல், ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், அழகுக்கலை, மெஹந்தி ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர்.
ஒன்றரை மணி நேரத்தில் தங்களுடைய திறமைகளை அவர்கள் வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டியிலும், முதல் மூன்று இடங்களை பிடித்தோருக்கு, 15 கிராம், 10 கிராம், 5 கிராம் எடையிலான வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் இந்திய ஆரி தொழிலாளர் சங்கத்தின் தேசிய உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை, இந்திய ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் மாலதி, இணை செயலாளர் சுகன்யா
உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

