/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊமைத்துரையின் 224வது நினைவு தினம் அனுசரிப்பு
/
ஊமைத்துரையின் 224வது நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : நவ 17, 2025 04:08 AM
ராசிபுரம்: இந்திய விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையின், 224வது நினைவு தினம், நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
ராசிபுரம் அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியில் விடுதலை களம் கட்சி சார்பில், நேற்று ஊமைத்துரை படத்தை வைத்து நினைவு தினம் அனுசரித்தனர். தலைவர் நாகராஜன் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மேலும், ஊமைத்துரை, வீரபாண்டிய கட்டபொம்மனை வாழ்த்தி முழக்கமிட்டனர்.தொடர்ந்து, ஊமைத்துரை வரலாற்றை நினைவு கூர்ந்தும், அவரின் வரலாற்றை பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் எனவும், சென்னை கிண்டியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு வைக்கப்பட்டுள்ள சிலை அருகே, ஊமைத்துரைக்கும் சிலை அமைக்க வேண்டும் எனவும், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

