நாமக்கல் ;'நாமக்கல் மாவட்டத்தில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், இன்று, 38 டிகிரி செல்ஷியஸ் வரை பகல் நேர வெப்பம் இருக்கும். நாளை முதல், 21 வரை, 35 முதல், 37 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 24 டிகிரி முதல், 27 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம், 50 முதல், 90 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் மேற்கு, வடமேற்கு திசையில் இருந்து, மணிக்கு, 8 முதல், 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இன்று, 36 மி.மீ., நாளை, 1 மி.மீ., வரும், 19ல், 10 மி.மீ., 20ல், 4 மி.மீ., 21ல், 4 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோழி பண்ணையாளர்களுக்கு: கடந்த வாரம் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகள், பெரும்பாலும் வெப்ப அயற்சியால் இறந்துள்ளன. அதனால், பண்ணைகளில் கோடைகால பராமரிப்பு முறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். வெப்ப அயற்சியின் தாக்கத்தை குறைக்க தண்ணீர் தெளிப்பான்களை பயன்படுத்த வேண்டும். தீவனத்தில் வைட்டமின் சி மற்றும் நுண்ணுாட்டச்சத்துக்கள் கலந்துகொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.