/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜாபர் சாதிக் ஜாமின் மனு தள்ளுபடி
/
ஜாபர் சாதிக் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : டிச 20, 2024 01:32 AM
சென்னை, டிச. 20-
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரின் சகோதரரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தர
விட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால், கடந்த மார்ச்சில் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, சகோதரர் முகமது சலீம், திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் மீது, அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 பேர் மீது அமலாக்கத்துறை 302 பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் தரப்பில் ஜாமின் கோரி, சென்னை கூடுதல் சி.பி.ஐ., நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாணை, நீதிபதி எழில்வேலவன் முன் நடந்து வந்தது. அப்போது, இருவருக்கும் ஜாமின் வழங்க அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை தள்ளிவைத்தார். இந்நிலையில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் இருவருக்கும் ஜாமின் வழங்க முடியாது என்று தெரிவித்து, இருவரின் மனுக்
களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.