/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கபடி போட்டி: அரசு பள்ளிக்கு பாராட்டு
/
கபடி போட்டி: அரசு பள்ளிக்கு பாராட்டு
ADDED : ஆக 19, 2024 05:53 AM
நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் வட்டார அளவிலான பெண்கள் கபடி விளையாட்டு போட்டியில், சூப்பர் சீனியர் பிரிவில் நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். அதேபோல், சீனியர் பிரிவில் நடந்த கபடி போட்டியில், இராண்டம் இடம் பிடித்தனர். செஸ் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
கோ-கோ விளை-யாட்டு போட்டியில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என, மூன்று பிரிவிலும் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவியரை, தலைமை ஆசிரியை சத்தியவதி பாராட்-டினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அன்பழகன், நிர்வா-கிகள் செந்தில்குமார், பாபு, ராமலிங்கம், கிருஷ்ணன் ஆகியோர், மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

