/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கு.பாளையம் எக்ஸல் இன்ஜி., கல்லுாரி 'ஹைர் மீ' உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ADDED : நவ 20, 2025 01:52 AM
குமாரபாளையம், குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லுாரி, காம் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், 'ஹைர் மீ' உடன் புந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் மூலம், வல்லியப்பா அறக்கட்டளை, மாணவர்களுக்கு மெடிக்கல் கோடிங் பயிற்சியை நடத்த உள்ளது. இதில், மனித உடலியல், உடற்பணி, ஐ.சி.டி-10-சி.எம்., சி.பி.டி., கோடிங் நடைமுறைகள் உள்ளிட்ட முக்கிய பாடப்பகுதிகளையும், தனிப்பட்ட கல்வி மேலாண்மை முறையையும் உள்ளடக்கியதாக இருக்கும். 'ஹைர் மீ' நிறுவனம் தொழில் தொடர்புகளை ஒருங்கிணைத்து, கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தும். இதன் மூலம் மாணவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெறுவர்.
இந்த ஒப்பந்தத்தில், 'ஹைர் மீ' நிறுவனத்தின் மண்டல மேலாளர் கிரீஷ் ராய், எக்ஸல் பொறியியல் கல்லுாரி முதல்வர் பொம்மண்ணராஜா ஆகியோர் கையெழுத்திட்டனர். டீன் ஜீவானந்தம், துறை தலைவர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 'இந்த கூட்டாண்மை, தொழில் மற்றும் கல்வி துறைகளுக்கிடையிலான இணைப்பை வலுப்படுத்தி, திறன் குறைவை குறைத்து, மாணவர்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றமடைய வழிவகுக்கும்' என, எக்ஸல் கல்லுாரி மற்றும் 'ஹைர் மீ' நிறுவனத்தினர் கூட்டாக தெரிவித்தனர்.