/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இல.கணேசன் மறைவு: பா.ஜ.,வினர் அஞ்சலி
/
இல.கணேசன் மறைவு: பா.ஜ.,வினர் அஞ்சலி
ADDED : ஆக 17, 2025 02:16 AM
நாமக்கல், நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன், நேற்று முன்தினம் உயிரிழந்தார். சென்னை தி.நகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசனின் படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலத்தப்பட்டது. அப்போது, அவர் பேசுகையில், ''பா.ஜ.,வின் மூத்த தலைவர், கட்சிப்
பணிக்காக திருமணம் செய்து கொள்ளாமல் உழைத்தவர். பா.ஜ., வளர்ச்சிக்காகவும், தமிழ் மண்ணின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து கடுமையாக உழைத்தவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது,'' என, புகழாரம் சூட்டினார். பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சுப்ர
மணியம், முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துகுமார், நகர பொதுச்செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
* புதுச்சத்திரம் ஒன்றிய பா.ஜ., சார்பில், பஸ் ஸ்டாப்பில் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நலத்திட்ட பிரிவு மாநில துணை தலைவர் லோகேந்திரன், ஒன்றிய பொதுச்செயலாளர் சத்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.