ADDED : ஜூன் 25, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, தொட்டியப்பட்டி ரேஷன் கடையில் கடந்த, இரண்டு மாதமாக பருப்பு, பாமாயில், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து ரேஷன் கடை முன், மா.கம்யூ., கட்சி சார்பில், தொட்டியப்பட்டி கிளை செயலாளர் நடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மாதர் சங்க ஒன்றிய தலைவர் ஞானாம்பாள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.