தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'மகிழ் வனம்' திட்டம் துவக்கம்

'மகிழ் வனம்' திட்டம் துவக்கம்

'மகிழ் வனம்' திட்டம் துவக்கம்


ADDED : நவ 14, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில், சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி பயன் தரும் மரக்கன்றுகளை நடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அரசு மருத்துவ கல்லுாரி முதல், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வரை உள்ள இடங்களில், பரவியிருந்த சீமை கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, அந்த இடங்களில், பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 1,000 மரக்கன்றுகள் நடும், 'மகிழ் வனம்' திட்ட துவக்க விழா நடந்தது. நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நல ஆணையருமான ஆசியா மரியம், திட்டத்தை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நடவு செய்தார்.

கலெக்டர் மதுபாலன், எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us