/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஈஷா யோகா கைப்பந்து போட்டி மல்லசமுத்திரம் அணி வெற்றி
/
ஈஷா யோகா கைப்பந்து போட்டி மல்லசமுத்திரம் அணி வெற்றி
ஈஷா யோகா கைப்பந்து போட்டி மல்லசமுத்திரம் அணி வெற்றி
ஈஷா யோகா கைப்பந்து போட்டி மல்லசமுத்திரம் அணி வெற்றி
ADDED : ஆக 18, 2025 03:23 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, ஈஷா யோகா சார்பில் மாவட்ட அளவில் நடந்த கைப்பந்து போட்டியில் மல்லசமுத்திரம் அணியினர் வெற்றி பெற்றனர்.
கோவை ஈஷா யோகா சார்பில், தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த வாலிபால், கபடி போன்ற விளையாட்டுகளை, கடந்த, 17 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் பார்க்-கவன் விளையாட்டு மைதானத்தில், கடந்த, 2 நாட்களாக ஈஷா யோகா சார்பில் கைப்பந்து போட்டி நடந்தது. நாக்அவுட் முறையில் நடந்த இப்போட்டியில் நாமக்கல், பட்டணம், பூலா-வரி, மல்லசமுத்திரம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட அணி-யினர் கலந்துகொண்டனர். நேற்று இரவு நடந்த இறுதி போட்-டியில் மல்லசமுத்திரம் அணியிருனரும் பூலாவாரி அணியினரும் மோதிக்கொண்டன. பரபரப்பாக நடந்த போட்டியில் மல்லச-முத்திரம் அணியினர், 21-25, 25-23, 25-22 என்ற புள்ளிக-ணக்கில் வெற்றிபெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கு பட்டணம் டவுன் பஞ்., துணைத்த-லைவர் நல்லதம்பி மற்றும் ஆனந்தா பள்ளி இயக்குனர் சக்-திவேல், ராசிபுரம் மையத்தின் ஈஷா ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.