/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போலீசார் அடித்ததாக பதிவிட்டவர் கைது
/
போலீசார் அடித்ததாக பதிவிட்டவர் கைது
ADDED : ஜூலை 14, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த நெட்டவேலம்பாளையத்தை சேர்ந்தவர் வினோத், 30; இவர், அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்பவரை கொலை மிரட்டல் விடுத்து, அவதுாறாக பேசியுள்ளார்.
இதுகுறித்து புகார்படி, வெப்படை போலீசார், விசாரணைக்காக வினோத்தை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, போலீசாரிடமும் பிரச்னை செய்துள்ளார். மேலும், அவதுாறு பரப்பும் வகையில், போலீசார் தன்னை அடித்ததாக பொய்யான வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு வினோத்தை வெப்படை போலீசார் கைது செய்தனர்