/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
/
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : ஏப் 30, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்:-ராசிபுரம் அருகே, வண்டிக்காரன் தோட்டத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் மணி, 36; கூலித்தொழிலாளி. இவர், ப.வேலுார் அருகே, பொத்தனுாரை சேர்ந்த மோகன்தாஸ் என்பவரது தோட்டத்தில், நேற்று முன்தினம் மாலை, தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மணி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

