/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோரம் மருத்துவ கழிவு குவிப்பு: நோய் பரவும் அபாயம்
/
சாலையோரம் மருத்துவ கழிவு குவிப்பு: நோய் பரவும் அபாயம்
சாலையோரம் மருத்துவ கழிவு குவிப்பு: நோய் பரவும் அபாயம்
சாலையோரம் மருத்துவ கழிவு குவிப்பு: நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூலை 13, 2025 02:08 AM
பள்ளிப்பாளையம், தெற்குபாளையம் பகுதி சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் அதிகளவில் குவிந்துள்ளதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பள்ளிப்பாளையம் அருகே, தெற்குபாளையம் பகுதியில் வாய்க்கால் கரையோரம் செல்லும் சாலைப்பகுதியில், சில தினங்களுக்கு முன் ஆபத்தான முறையில் ஏராளமான ஊசிகள், சிரஞ்சுகள், எச்.ஐ.வி., மற்றும் ரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரத்த மாதிரிகள், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கிடந்தன. இந்த சாலை வழியாக, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அவர்கள், விளையாட்டு தனமாக ஊசி, சிரஞ்சு, மருத்துவ கழிவுகளை கையில் எடுத்து விளையாட வாய்ப்புள்ளது.
இங்கு கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள், அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டதா என தெரியவில்லை. மேலும், இப்பகுதியில் பலர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடு உள்ளிட்டவை, இந்த மருத்துவ கழிவுகளை உட்கொண்டால் கால்நடைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, தெற்குபாளையம் வாய்க்கால் கரையோரம் சாலைப்பகுதியில் குவிந்துள்ள மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.