/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள்; அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள்; அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு
எம்.ஜி.ஆர்., நினைவு நாள்; அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு
எம்.ஜி.ஆர்., நினைவு நாள்; அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு
ADDED : டிச 25, 2024 07:44 AM
நாமக்கல்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 37ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் -பரமத்தி சாலை, மாநகராட்சி செலம்ப கவுண்டர் பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நகர செயலாளருமான பாஸ்கர் தலைமையிலான, அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்தும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், குமாரபாளையத்தில், நகர செயலாளர் பாலசுப்ரமணி தலைமையிலும், குமரமங்கலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., பொன்சரஸ்வதி தலைமையிலும், ராசிபுரம் பகுதியில், நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையிலும் அஞ்சலி செலுத்தினர். நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் மணிக்கண்ணன், நிர்வாகிகள் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.