/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை: மத்திய அரசுக்கு கோரிக்கை
/
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை: மத்திய அரசுக்கு கோரிக்கை
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை: மத்திய அரசுக்கு கோரிக்கை
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை: மத்திய அரசுக்கு கோரிக்கை
ADDED : நவ 25, 2024 03:05 AM
நாமக்கல்: 'விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய பா.ஜ., அரசு, 3-வது முறையாக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின், 2024-25ம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்-கையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும், குறைந்த-பட்ச ஆதார விலை உறுதி செய்யப்படும் என அறிவித்தனர்.
ஆனால், இதுவரையிலும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்-ணயம் செய்வதற்கு, மத்திய பா.ஜ., அரசு எவ்வித நடவடிக்கை-யையும் எடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், தங்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடும் நிலையே உள்ளது. இதை மத்தியில் ஆட்சி செய்யும், பா.ஜ., அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து அறிவிக்க, மத்திய பா.ஜ., அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.