/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.14 கோடியில் திட்டப்பணி அமைச்சர் தொடங்கி வைப்பு
/
ரூ.14 கோடியில் திட்டப்பணி அமைச்சர் தொடங்கி வைப்பு
ADDED : மே 03, 2025 01:43 AM
ராசிபுரம்:ராசிபுரம் பஞ்., யூனியனில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், அணைப்பாளையம் ஊராட்சியில், 38.36 லட்சம் ரூபாய் மதிப்பில், எட்டு புதிய வளர்ச்சி திட்ட பணிகள், போடிநாயக்கன்பட்டி பஞ்.,ல், 39.36 லட்சம் ரூபாய் மதிப்பில், 16 புதிய வளர்ச்சி திட்டப்பணிகள், மோளப்பாளையம் பஞ்.,ல், 40.47 லட்சம் ரூபாய் மதிப்பில், எட்டு புதிய வளர்ச்சி திட்ட பணிகள் என, மொத்தம், 1.18 கோடி ரூபாய் மதிப்பில், 32 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நேற்று ஒரே நாளில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அட்மா குழுத்தலைவர்கள் ஜெகநாதன், துரைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, பேரூராட்சி உதவி இயக்குனர் குருராஜன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.