/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை அதிகாரிகளுக்கு எம்.பி., அறிவுறுத்தல்
/
கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை அதிகாரிகளுக்கு எம்.பி., அறிவுறுத்தல்
கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை அதிகாரிகளுக்கு எம்.பி., அறிவுறுத்தல்
கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை அதிகாரிகளுக்கு எம்.பி., அறிவுறுத்தல்
ADDED : நவ 05, 2024 02:04 AM
கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை
அதிகாரிகளுக்கு எம்.பி., அறிவுறுத்தல்
நாமக்கல், நவ. 5-
நாமக்கல் - சேலம் சாலை, 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, அன்பு நகர் செல்லும் சாலையில், கழிவுநீர் கால்வாயில் நீர் செல்லாமல் தேங்கியுள்ளது.
இதுகுறித்து, எம்.பி., மாதேஸ்வரனுக்கு புகார் சென்றது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியில், எம்.பி., மாதேஸ்வரன் ஆய்வு செய்தார். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். 'பொதுமக்களின் நலன் கருதி, நோய் தொற்றை தடுக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து, கழிவுநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கொ.ம.தே.க., ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் மணி, 6வது வார்டு கவுன்சிலர் மோகன், நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.