sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எப்.சி., கட்டண உயர்வை மாற்றியமைக்க பார்லியில் எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு

/

எப்.சி., கட்டண உயர்வை மாற்றியமைக்க பார்லியில் எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு

எப்.சி., கட்டண உயர்வை மாற்றியமைக்க பார்லியில் எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு

எப்.சி., கட்டண உயர்வை மாற்றியமைக்க பார்லியில் எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு


ADDED : டிச 11, 2025 06:50 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: டில்லியில் நடந்து வரும் பார்லி., கூட்டத்தொ-டரில், ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில், நாமக்கல் ராஜ்யசபா எம்.பி., ராஜேஸ்குமார் பேசி-யதாவது:

மத்திய அரசு, பழைய கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை, ஸ்கிராப் செய்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க வேண்டும்; ஆண்டுதோறும், எப்.சி., சான்று பெறுவதற்கான கட்டணம், 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என, உத்தரவிட்-டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலான லாரி உள்-ளிட்ட வணிக வாகனங்களை, கட்டாயமாக ஸ்கிராப்பிங் செய்து விற்பனை செய்வது, எண்-ணற்ற லாரி உரிமையாளர்களின் வாழ்வாதா-ரத்தை கடுமையாக பாதித்து வருகிறது.

இந்திய சரக்கு போக்குவரத்தின் முதுகெலும்பான லாரிகளில், மாசுபாட்டிற்கான முக்கிய காரணம் பொதுவாக பழைய இன்ஜின் தான். எனவே, பழைய லாரிகள் முழுமையாக ஸ்கிராப் செய்-யாமல், பழைய மாசுபடுத்தும் இன்ஜினை மாற்றி, புதிய பாரத் ஸ்டேஜ்-6 நிலைக்கு இணக்கமான இன்ஜினை லாரியில் பொருத்தினால், சுற்றுச்-சூழல் மாசு தடுக்கப்படும். இந்த கொள்கையை மறுபரிசீலனை செய்து, 20 ஆண்டுகளுக்கும் மேலான லாரிகளில் பழைய இன்ஜினை மட்டும் மாற்றி, புதிய பி.எஸ்.,6 சான்-றளிக்கப்பட்ட இன்ஜினை பொருத்தி பழைய லாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டும்.

முழு-மையாக லாரிகளை ஸ்கிராப் செய்ய வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us