/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடல்
/
பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடல்
ADDED : ஜூலை 09, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: பொத்தனுார் பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாக சாலைக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.ப.வேலுார் அருகே, பொத்தனுார் பகுளாமுகி நகரில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலில், வரும் ஆக., 23ல் கும்பாபிஷேக விழா நடக்கிறது.
அதை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி, நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவாச்சாரியார்கள், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.