ADDED : டிச 24, 2024 01:56 AM
வாத்து கடைக்கு மர்ம நபர்கள் தீ
ப.வேலுார், டிச. 24--
ப.வேலுாரை சேர்ந்தவர் வேலுச்சாமி, 70; இவர், ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் வாத்து கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் வாத்து விற்பனை முடித்துவிட்டு வீடு திரும்பினார். நள்ளிரவில், அப்பகுதியில் மர்ம நபர்கள் வழக்கம்போல் மது அருந்திக் கொண்டிருந்தனர். மது போதையில் இருந்த மர்ம நபர்கள், வாத்து கடைக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில், வாத்து கடை முழுவதும் எரிந்து நாசமானது. மாலையில், மீதமுள்ள வாத்துகளை, வேலுச்சாமி, வீட்டிற்கு கொண்டு சென்றதால் அதிர்ஷ்டவசமாக வாத்துகள் உயிர் தப்பின. இதுகுறித்து, ப.வேலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாத்து கடைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் உள்ள இதர கடைக்காரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.