sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலய தேர் திருவிழா கோலாகலம்: மறை மாவட்ட ஆயர் பங்கேற்பு

/

நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலய தேர் திருவிழா கோலாகலம்: மறை மாவட்ட ஆயர் பங்கேற்பு

நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலய தேர் திருவிழா கோலாகலம்: மறை மாவட்ட ஆயர் பங்கேற்பு

நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலய தேர் திருவிழா கோலாகலம்: மறை மாவட்ட ஆயர் பங்கேற்பு


ADDED : நவ 25, 2024 03:08 AM

Google News

ADDED : நவ 25, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்-டுதோறும் தேர் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படு-வது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 17ல், கொடியேற்றத்-துடன் துவங்கியது. தொடர்ந்து, 18, 19, 20, 21, 22, 23ல், மாலை, 6:00 மணிக்கு நவநாள் திருப்பலி நடந்தது. நேற்று காலை, 8:30 மணிக்கு, சேலம் மறைமாவட்ட தலைமை ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில், புதுநன்மை, உறுதிபூ-சுதல் விழா, ஆடம்பர கூட்டுத்திருப்பலி கோலாகலமாக நடந்தது.

மாலை, 6:00 மணிக்கு, திருவிழா கூட்டுத்திருப்பலி, இக்னே-சியஸ் பிதேலிஸ் தலைமையில் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அமல் மகிமைராஜ் தலைமையில், ஆடம்பர தேர் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மின் அலங்காரத்தில் எழுந்தருளி கிறிஸ்து அரசர், முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்க-ளுக்கு ஆசீர் வழங்கினார். வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலை அணிவித்தும் புனிதரை வணங்-கினர்.இரவு, 9:30 மணிக்கு, திவ்விய நற்கருணை ஆசீர் மற்றும் கொடியிறக்கம், திருத்தொண்டர் அஜித்குமார் தலைமையில் நடந்-தது. ஏற்பாடுகளை, பங்கு தந்தை தாமஸ் மாணிக்கம், அருட்ச-கோதரிகள், விழாக்குழு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us