/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாவட்ட மாணவர்கள் சர்வதேச துாதர்களாக தேர்வு
/
நாமக்கல் மாவட்ட மாணவர்கள் சர்வதேச துாதர்களாக தேர்வு
நாமக்கல் மாவட்ட மாணவர்கள் சர்வதேச துாதர்களாக தேர்வு
நாமக்கல் மாவட்ட மாணவர்கள் சர்வதேச துாதர்களாக தேர்வு
ADDED : ஆக 29, 2025 01:22 AM
திருச்செங்கோடு, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில், சர்வதேச துாதர்களாக தேர்வு செய்யப்பட்ட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு, திருச்செங்கோட்டில் நடந்த உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியில், நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில், நாமக்கல் மாவட்ட மாணவர்கள் இரண்டு பேர் சர்வதேச துாதர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட, நிலையான வளர்ச்சி கவுன்சில் சார்பில், ஐந்தாவது
சர்வதேச இளைஞர் மன்ற மாநாடு தாய்லாந்தின் பாங்காங் நகரில் கடந்த, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்தியா உட்பட, 62 நாடுகளில் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து, 8 முதல் பிளஸ் 1 வரை பயிலும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர்களின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்த அறிவு, சிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்டவர்கள் பள்ளி சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். பள்ளிக்கல்வி துறையால் தேர்வு செய்யப்பட்ட தலா 3 மாணவ, மாணவியர் மற்றும் ஒரு ஆசிரியர் அரசு பள்ளிகள் சார்பில் பாங்காங் அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, கீரம்பூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 1 பயிலும் யாழினி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் கமலேஷ் ஆகியோர் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தின் மூலம், சர்வதேச அளவில் பிராண்டு துாதர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.