/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் பொறுப்பேற்பு
/
நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் பொறுப்பேற்பு
நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் பொறுப்பேற்பு
நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் பொறுப்பேற்பு
ADDED : ஜன 20, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: தமிழகத்தில், நேற்று, 33 மாவட்ட தலைவர்களின் பெயர் பட்டியலை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதன்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் குழு தலைவர் சத்தியபானு தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், கிழக்கு மாவட்ட தலைவராக சரவணனை அறிவித்தார்.
இதையடுத்து, அவர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றார். நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி சேர்மனான சரவணன், ஏற்கனவே, நாமக்கல் நகர தலைவராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைவருக்கு, கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.