/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் கிட்னி புரோக்கர்கள் சேலம் சிறையில் அடைப்பு
/
நாமக்கல் கிட்னி புரோக்கர்கள் சேலம் சிறையில் அடைப்பு
நாமக்கல் கிட்னி புரோக்கர்கள் சேலம் சிறையில் அடைப்பு
நாமக்கல் கிட்னி புரோக்கர்கள் சேலம் சிறையில் அடைப்பு
ADDED : அக் 13, 2025 11:31 PM
பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், அன்னை சத்யா நகரை சேர்ந்த கவுசல்யா, வறுமையால் தன் கிட்னியை விற்பனை செய்ததாக தெரிவித்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கிட்னி திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது.
இக்குழு தலைவர், தெற்கு மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் விசாரணை நடத்தி, கிட்னி புரோக்கர்கள் ஆனந்தன், ஸ்டாலின் மோகன் ஆகிய இருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
நேற்று அதிகாலை வரை இருவரிடமும் விசாரித்தனர். அதன் பின், குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.