/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பழைய பைப் லைன் மூலமே குடிநீர் வினியோகம் கோரி மனு
/
பழைய பைப் லைன் மூலமே குடிநீர் வினியோகம் கோரி மனு
ADDED : அக் 14, 2025 02:19 AM
நாமக்கல், நாமகிரிப்பேட்டை, அன்னை சத்தியா நகர் பகுதியில் புதிய குடிநீர் இணைப்பை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது: நாமகிரிப்பேட்டை அன்னை சத்தியா நகர், நடுவீதியான எங்கள் பகுயில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ரோட்டின் மேலேயே இரும்பு பைப்லைன் போட்டு புதிய குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள், டூவீலரில் செல்லும்போது இடித்து கிழே விழுகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களை வீட்டிற்குள் கொண்டு செல்ல முடியாமல் பாதுகாப்பற்ற வகையில் வெளியேயே நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
பழைய குடிநீர் இணைப்பில் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. அதேபோல் புதிய இணைப்பு வேண்டி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எனவே, புதிய பைப்லைனை அகற்றிவிட்டு பழைய இணைப்பிலேயே குடிநீர் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், ஒரு சில வார்டுகளில் பழைய குடிநீர் பைப் லைனிலேயே மீட்டர் பொருத்தி குடிநீர் வழங்கப்படுகிறது. அதேபோல் எங்கள் குடியிருப்பு பகுதிக்கும் பழைய பைப் லைனிலேயே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.