ADDED : அக் 13, 2025 02:09 AM
நாமக்கல்:தொடர் மழையால், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.
நாமக்கல்-மோகனுார் சாலையில், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. அங்கு, 6 முதல், 12ம் வகுப்பு வரை, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அம்மாணவர்கள் விளையாடுவதற்காக பள்ளி வளாகத்தில் மைதானம் உள்ளது. மேலும், மாவட்டத்தின் பெரிய மைதானமான இங்கு, பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் வட்ட, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளும் நடக்கும்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ந்து மழைபெய்ததாலும், காலாண்டு தேர்வு விடுமுறையாலும், தற்போது அந்த மைதானத்தில் அதிகளவு செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. அந்த மைதானத்தை துாய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.