/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் முதலிடம்
/
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் முதலிடம்
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் முதலிடம்
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் முதலிடம்
ADDED : மே 15, 2025 01:46 AM
நாமக்கல் :நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியின், பத்து, பிளஸ் 2 தேர்வு சி.பி.எஸ்.இ., மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி, தமிழ், 100, கணிதம், 100, தகவல் தொழில் நுட்பம், 100, அறிவியல், 99, ஆங்கிலம், 98 என, 500-க்கு, 497 மதிப்பெண் பெற்று, மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். மாணவி, ஸ்ருதிகா, 491 மதிப்பெண் பெற்று, 2ம் இடம்; மாணவர்கள் அக்ஷத், சிவராஜ், மாணவி ஜீவிகா ஆகியோர், 490 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்தனர்.
தமிழ் பாடத்தில், ஏழு பேர், அறிவியல், தகவல் தொழில் நுட்பத்தில், தலா, 2 பேர், கணிதம், சமூக அறிவியலில் தலா, ஒருவர் என, 13 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், 50 சதவீத மாணவ, மாணவியர், 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில், சஞ்ஜிதா கண்ணன், 500-க்கு, 484 மதிப்பெண், நிரஞ்சன், 474, ஆரவ் சிவராஜ், சக்தி நந்தன் ஆகியோர், 473 மதிப்பெண் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
ஓவிய பாடத்தில், 100க்கு, 100 மதிப்பெண் ஒருவர், வேதியியல், கணினி அறிவியலில் தலா, ஒருவர், 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தலைவர் சரவணன், முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.