/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை சீரமைப்பு விறுவிறு
/
நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை சீரமைப்பு விறுவிறு
நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை சீரமைப்பு விறுவிறு
நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை சீரமைப்பு விறுவிறு
ADDED : ஆக 05, 2025 01:40 AM
நாமக்கல், மத்திய ரயில்வே அமைச்சகத்தின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள, 1,275 ரயில்வே ஸ்டேஷன்கள் புதுப்பிக்கும் பணி, 2023 ஆக., 6ல் துவங்கி நடந்து வருகிறது. முதல் கட்டமாக முடிவுற்ற, 58 ரயில்வே ஸ்டேஷன்களும், இரண்டாம் கட்டமாக, 103 ரயில்வே ஸ்டேஷன்களும் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம், 71 ரயில்வே ஸ்டேஷன்களில் புதுப்பிப்பு பணி நடந்து வரும் நிலையில், தற்போதைக்கு, ஒன்பது ரயில்வே ஸ்டேஷன்கள் திறக்கப்பட்டுள்ளன. புதுப்பிப்பு பட்டியலில் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனும் இடம் பெற்றுள்ளது. தற்போது, 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ் ஷெட் நடைமேடை, ஒரு கி.மீ., துாரத்திற்கு சீரமைப்பு பணி நடக்கிறது. இதற்காக, ஆக., 21 வரை மூடப்பட்டுள்ளது. இப்பணி நிறைவடையும் வரை, தீவன மூலப்
பொருட்கள், ரேஷன் பொருட்கள், சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து லாரிகள் மூலம் ஏற்றி நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டுவரப்படும் என, தெரிவித்துள்ளனர்.