ADDED : நவ 16, 2026 06:10 AM

நாமக்கல்:நாமக்கல்
மாவட்ட மைய நுாலகம், மைய நுாலக வாசகர் வட்டம், ஜவகர் சிறுவர் மன்றம்
சார்பில், தேசிய நுாலக வார விழா, மாநகராட்சி கோட்டை துவக்க பள்ளியில்
நடந்தது. மாவட்ட நுாலக அலுவலர் வேல்முருகன் தலைமை வகித்தார்.
மைய
நுாலக முதல் நிலை நுாலகர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கோட்டை
மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா வாழ்த்தி
பேசினர். வாசகர் வட்ட தலைவர் பசுமை தில்லை சிவக்குமார் பேசுகையில்,
''குழந்கைள், பிறர் நம்மை தொட அனுமதிக்க கூடாது. 'குட் டச்; பேட் டச்'
என்று சொல்வதை விட்டு, 'நோ டச்; டோன்ட் டச்' என, சொல்லி பழக வேண்டும்.
குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை குறைத்து, தினமும்
புத்தகங்களை வாசிக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, ஜவகர் சிறுவர்
மன்ற குழந்தைகளின் பரத நாட்டியம், கிராமிய நடனம், கரகாட்டம்,
ஒயிலாட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஜவகர்
சிறுவர் மன்ற கலை ஆசிரியர்கள் தேவயாணி, பாண்டியராஜன், சரவணன்,
வெங்கடேஷ், பிரவீன் உள்பட பலர் பங்கேற்றனர்.
