/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் ஜி.ஹெச்.,ல் நரம்பியல் சிகிச்சை; பிரிவு துவக்க வேண்டும்: எம்.பி., கோரிக்கை

ADDED : பிப் 10, 2025 07:21 AM
நாமக்கல்: 'நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், உடனடியாக நரம்பியல் சிகிச்சை பிரிவு துவக்க வேண்டும்' என, எம்.பி., மாதேஸ்வரன், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக மக்கள் நால்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியனுக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 2024ல் மட்டும், நாமக்கல் மாவட்டத்தில், 39,938 பேர் சாலை விபத்துகளில் சிக்கியுள்ளனர். அதில், 8,754 பேர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுள்ளனர். இங்கு நரம்பியல் சிகிச்சை பிரிவு இல்லாததால், நரம்பியல் சம்பந்தமாக உயர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை, 60 கி.மீ., தொலைவில் உள்ள சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதனால், தீவிர சிகிச்சை பெற வேண்டிய பல நோயாளிகள், சேலம் செல்லும் வழியில் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. நோயாளிகள் உயிரை காக்கும் உன்னத நோக்கில், அனைத்து வசதிகளும் உள்ள நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், உடணடியாக நரம்பியல் சிகிச்சை பிரிவு துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.