/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.46.62 லட்சம் மதிப்பில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம், ஆவின் பாலகம் திறப்பு
/
ரூ.46.62 லட்சம் மதிப்பில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம், ஆவின் பாலகம் திறப்பு
ரூ.46.62 லட்சம் மதிப்பில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம், ஆவின் பாலகம் திறப்பு
ரூ.46.62 லட்சம் மதிப்பில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம், ஆவின் பாலகம் திறப்பு
ADDED : செப் 28, 2025 01:55 AM
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம், மோகனுார் மற்றும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், 46.62 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள், ஆவின் பாலகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
எம்.பி., ராஜேஸ்குமார் திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அப்போது, அவர் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின், விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில், பால் உற்பத்தியாளர்களின் நலன் காத்திட லிட்டருக்கு, மூன்று ரூபாய் வரை ஊக்கத்தொகை, கொழுப்பு நிறைந்த பாலுக்கு ஒரு ரூபாய் கூடுதல் தொகை மற்றும் போனஸ் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இல்லம் தேடி உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு, செயற்கை முறை கருவூட்டல் வசதி செய்யப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கு அவசர கால சேவை மையம் மூலம் அவசர கால மருத்துவ வசதி நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் ராசிபுரம், நாமக்கல், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில், 3.04 கோடி ரூபாய் மதிப்பில், 14 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்து வைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. மேலும், நாமக்கல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, புதுச்சத்திரம் குட்டமூக்கன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மோகனுார் தோளுர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், தலா, 15.54 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம், பாலகம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கலை கல்லுாரியில், 15.54 லட்சம் ரூபாய் என, மொத்தம், 46.62 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநகராட்சி துணை மேயர் பூபதி, ஆவின் பொது மேலாளர் சண்முகம், பால்வளம் துணைப்பதிவாளர் சண்முகநதி, கல்லுாரி முதல்வர் மாதவி, துறைத்தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.