/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல் குவாரி வேண்டாம்: கலெக்டரிடம் விவசாயிகள் மனு
/
கல் குவாரி வேண்டாம்: கலெக்டரிடம் விவசாயிகள் மனு
ADDED : ஜூலை 09, 2024 05:55 AM
நாமக்கல்: எலச்சிபாளையம் யூனியன், கோக்கலை கிராமத்தில் புதிய கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கி உள்ளனர். இதனை தடை செய்ய வேண்டும் என, பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கக்கவில்லை. அதனால், கல்குவாரிக்கு வழங்கிய அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோக்கலை, நெய்க்காரம்பாளையம், எளையாம்பாளையம், குஞ்சாம்பாளையம், பெரியமணலி, குருக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், 'சாலைகளை பாதுகாப்போம்; விவசாயிகளை பாதுகாப்போம், ராஜ வாய்க்கால் குவாரி தடை செய்ய வேண்டும்' என, கோரிக்கைகள் அச்சிடப்பட்ட பேனரை உடலில் தொங்கவிட்டுக் கொண்டு, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர். தொடர்ந்து, அவர்கள், கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.