/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாட்டுக்கோழி விலை உயர்வு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி
/
நாட்டுக்கோழி விலை உயர்வு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி
நாட்டுக்கோழி விலை உயர்வு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி
நாட்டுக்கோழி விலை உயர்வு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி
ADDED : ஆக 11, 2025 05:59 AM
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுகி-றது. அதன்படி, நேற்று கூடிய சந்தையில், பர-மத்தி, ப.வேலுார், மோகனுார், நாமக்கல், திருச்-செங்கோடு, கந்தம்பாளையம் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள், தாங்கள் வளர்த்த நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்-தனர். கடந்த வாரம், நாட்டுக்கோழி ஒரு கிலோ, 500 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 150 ரூபாய் விலை உயர்ந்து, 650 ரூபாய்க்கு விற்பனை செய்-யப்பட்டது. இதேபோல், கிராஸ் நாட்டுக்கோழி, 250 ரூபாய்க்கு விற்றது, 100 ரூபாய் உயர்ந்து, 350 ரூபாய்க்கு விற்றதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆடி மாதத்தையொட்டி, பக்தர்கள் தங்கள் குல-தெய்வ கோவில்களில் வேண்டுதலை நிறை-வேற்ற நாட்டுக்கோழிகளை பலியிட்டு நேர்த்திக்-கடன் செலுத்துவர். அதனால், நாட்டுக்கோழி விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டதாக விவசாயிகள், வியாபாரிகள் தெரிவித்தனர்.