/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
7 பூசாரிகளிடம் எந்த தொடர்பும் வேண்டாம் என அறிவிப்பு பலகை
/
7 பூசாரிகளிடம் எந்த தொடர்பும் வேண்டாம் என அறிவிப்பு பலகை
7 பூசாரிகளிடம் எந்த தொடர்பும் வேண்டாம் என அறிவிப்பு பலகை
7 பூசாரிகளிடம் எந்த தொடர்பும் வேண்டாம் என அறிவிப்பு பலகை
ADDED : நவ 11, 2025 06:44 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், கோட்டைமேடு பைபாஸ் சாலை அருகே, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பத்ரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அதில், பரம்பரை பூசாரிகள் பூஜை செய்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் கோவில் வளாகத்தில் தங்கி, கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடி வருகின்றனர் என, புகார் எழுந்தது. மேலும், கோவில் வளாகத்தில் அரை நிர்வாண கோலத்தில் உள்ளாடையுடன் நட-மாடி வருகின்றனர்.
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் எழுந்தது. மேலும், இதுகுறித்து, 'சிசிடிவி' காட்-சிகள் வெளியாகின. அதில் கோவில் பூசாரிகள் கோவில் உண்டி-யலுக்குள் கையை விட்டு காணிக்கைகளை திருடுவதும், அரை நிர்வாண கோலத்தில் உடை மாற்றுவது குறித்த காட்சிகள் அடங்-கிய இந்த வீடியோ வெளியானது. இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வரும் நிலையில், இவர்களுடன் பக்தர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் முன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

