/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிநீர் குழாய் மீது நடைபாதை அமைக்க தடை விதித்து நோட்டீஸ்
/
குடிநீர் குழாய் மீது நடைபாதை அமைக்க தடை விதித்து நோட்டீஸ்
குடிநீர் குழாய் மீது நடைபாதை அமைக்க தடை விதித்து நோட்டீஸ்
குடிநீர் குழாய் மீது நடைபாதை அமைக்க தடை விதித்து நோட்டீஸ்
ADDED : ஆக 14, 2025 03:39 AM
ப.வேலுார்,'குடிநீர் குழாய் மீது நடைபாதை அமைக்க கூடாது' என பரமத்தி டவுன் பஞ்., நிர்வாம், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பரமத்தி டவுன் பஞ்.,க்குட்பட்ட, வெள்ளாளபாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில், காவிரி குடிநீர் குழாய் செல்லும் பாதையில், தனி நபர்கள் சிலர் நடைபாதை அமைக்க முயல்வதாக, அப்பகுதி மக்கள் டவுன் பஞ்., நிர்வாகத்திற்கு புகாரளித்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தை, டவுன் பஞ்., அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை அமைக்க வேண்டாம் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், பொதுமக்கள் மேற்கூறிய இடத்தில், பொத்தனுார் தலைமை நீரேற்று நிலையம் சார்பில், பிரதான மெயின் பைப் லைன்கள் அமைத்து, பரமத்தி டவுன் பஞ்., பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இந்த இடத்தில், நடைபாதை அமைத்தால், குடிநீர் வினியோகம் முழுவதும் பாதிக்கப்படும். அதனால், நடைபாதை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.