/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சத்துணவு ஊழியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்
/
சத்துணவு ஊழியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்
ADDED : நவ 13, 2024 07:30 AM
நாமக்கல்: சட்டசபை தேர்தலில், தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கோமதி தலைமை வகித்தார். அதில், சட்டசபை தேர்தலில், தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியான, 'சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்' என்பதை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர்.
மாநில துணைத்தலைவர் மஞ்சுளா, மாநில செயற்குழு உறுப்பினர் ஜானகி, மாவட்ட செயலாளர் தங்கராஜூ, துணை தலைவர்கள் சந்திரசேகர், தமிழரசி, இணை செயலாளர்கள் பெருமாள், சுமதி உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

