/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அதிகாரிகள் ஆய்வு, உணவிற்கு ரூ.28 லட்சம் செலவு கவுன்சிலர்கள் போராட்டம்: இ.ஓ., - தலைவர் வெளிநடப்பு
/
அதிகாரிகள் ஆய்வு, உணவிற்கு ரூ.28 லட்சம் செலவு கவுன்சிலர்கள் போராட்டம்: இ.ஓ., - தலைவர் வெளிநடப்பு
அதிகாரிகள் ஆய்வு, உணவிற்கு ரூ.28 லட்சம் செலவு கவுன்சிலர்கள் போராட்டம்: இ.ஓ., - தலைவர் வெளிநடப்பு
அதிகாரிகள் ஆய்வு, உணவிற்கு ரூ.28 லட்சம் செலவு கவுன்சிலர்கள் போராட்டம்: இ.ஓ., - தலைவர் வெளிநடப்பு
ADDED : அக் 01, 2024 07:17 AM
ப.வேலுார்: -ப.வேலுார் டவுன் பஞ்.,ல் நடந்த மன்ற கூட்டத்தில், 'அதிகாரிகளின் ஆய்வு, உணவிற்கு, 28 லட்சம் ரூபாய் செலவு' செய்ததாக கணக்கு சமர்ப்பித்தனர். இதற்கு, 10 கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரி-வித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், செயல் அலு-வலர், தலைவர் வெளிநடப்பு செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், நேற்று கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. தலைவர் லட்சுமி, செயல் அலு-வலர் சோமசுந்தரம், இளநிலை பொறியாளர் வீரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். தலைவர் லட்சுமி உள்பட, 15 கவுன்சி-லர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 10 தீர்மானங்கள் வாசிக்-கப்பட்டன. அதில், 6 தீர்மானங்களுக்கு ஆதரவும், 4 தீர்மானங்க-ளுக்கு, 10 கவுன்சிலர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதற்குரிய கடிதத்தை செயல் அலுவலர் சோமசுந்தரம், தலைவர் லட்சு-மியிடம் வழங்கினர். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
அப்போது, மூன்றாவது தீர்மானமாக, 'ப.வேலுார் டவுன் பஞ்சா-யத்தில், 2024 ஆக.,ல் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள், மன்-றத்தின் அங்கீகாரத்திற்கு' என, வாசிக்கப்பட்டது. இதற்கு, 10 கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, 'செலவு கணக்கு முறையாக காண்பிக்காமல், 'செக்' போட்டு டவுன் பஞ்., பொது நிதியிலிருந்து பணம் எடுத்துள்ளீர்கள். முறையாக கணக்கு காண்பியுங்கள்' என, கவுன்சிலர்கள் தெரிவித்தனர். அதை பொருட்படுத்தாமல், செயல் அலுவலர் சோமசுந்தரம், அடுத்த தீர்-மானத்தை வாசிக்க தொடங்கினார். இதனால் செயல் அலுவல-ருக்கும், கவுன்சிலர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, 'தீர்மானங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மன்ற கூட்டம் ரத்து செய்யப்படுகிறது' என, அறிவித்து-விட்டு, தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம், இள-நிலை பொறியாளர் வீரமணி மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால், 'கூட்டத்தை நிறைவு செய்ய தலைவர், செயல் அலுவலர் வரவேண்டும்' என, வலியுறுத்தி, 10 கவுன்சிலர்களும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்-டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சி-லர்கள் கூறியதாவது: குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்ய வந்த அதி-காரிகளின் சாப்பாட்டு செலவு, இதர செலவுக்கு, 28 லட்சம் ரூபாயை, டவுன் பஞ்., பொது நிதியிலிருந்து எடுத்துள்ளனர். கடந்த, இரு மாதங்களில் டவுன் பஞ்., நிதியிலிருந்து எடுக்கப்பட்ட, 10 காசோ-லைகள் குறித்து உரிய விளக்கம் தரவில்லை. ஏற்கனவே நிறை-வேற்றப்பட்ட, 18 தீர்மானங்கள் கிடப்பில் உள்ளன. தற்போது, மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றுகின்றனர். ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்-ளது. இதனால், ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் சோம-சுந்தரத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில், தி.மு.க.,வை சேர்ந்த, 9 கவுன்சிலர்களான நாங்கள், கவுன்சிலர் பத-வியை ராஜினாமா செய்வது மட்டுமின்றி, தி.மு.க.,விலிருந்து விலக நேரிடும் இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, செயல் அலுவலர் சோமசுந்தரம் கூறியதாவது: இன்று (நேற்று) ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஊழியர்கள் படித்துக்கொண்டி-ருந்த தீர்மான நகலை, கவுன்சிலர்கள் பறித்துக்கொண்டனர். அதனால் மேற்கொண்டு கூட்டம் நடத்த முடியவில்லை. கவுன்சி-லர்கள் அராஜகமாக நடந்து கொள்கின்றனர். டவுன் பஞ்சாயத்து செலவு குறித்து உரிய கணக்கு வழக்கு உள்ளது. அதற்குரிய செலவு குறித்து கவுன்சிலர்களிடம் கூறியபோது, ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அரசு விதிமுறைப்படியும், சட்டப்படியும் கவுன்சிலர்கள் மீது, ப.வேலுார் போலீசில் புகார் கொடுக்கப்பட்-டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.