/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி
/
வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி
ADDED : நவ 06, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகனம் மோதிய
விபத்தில் ஒருவர் பலி
ப.வேலுார், நவ. 6--
ப.வேலுார் அருகே, படமுடிபாளையம் தாசில்தார் அலுவலகம் எதிரே, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையை கடந்துள்ளார். அப்போது, நாமக்கல்லில் இருந்து கரூரை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அந்த நபர் பலியானார். இறந்த நபர் மஞ்சள் நிற சட்டை, பூ போட்ட லுங்கி அணிந்திருந்தார். விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து, ப.வேலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.