/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சொர்க்கவாசல் திறப்புகலெக்டர் ஆய்வு
/
சொர்க்கவாசல் திறப்புகலெக்டர் ஆய்வு
ADDED : ஜன 10, 2025 01:25 AM
சொர்க்கவாசல் திறப்புகலெக்டர் ஆய்வு
நாமக்கல், : நாமக்கல், அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல், அரங்கநாதர் அனந்த சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவர். இதனால் முன்னேற்பாடு பணிகள் குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்கள் வரிசையாக சென்று வரும் வகையில், கோவில் பகுதிகளில் பேரிகார்டு அமைத்து தடுப்புகள், வாகனம் நிறுத்துமிடம், பஸ்கள் தங்கு தடையின்றி செல்ல வசதி, பொதுமக்களுக்கான அடிப்படை வசதி, பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆர்.டி.ஓ., பார்த்திபன், மாநகராட்சி துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.