/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலைப்பணி முடியாமல் வழிகாட்டி பலகை வெளியூர் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
சாலைப்பணி முடியாமல் வழிகாட்டி பலகை வெளியூர் வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலைப்பணி முடியாமல் வழிகாட்டி பலகை வெளியூர் வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலைப்பணி முடியாமல் வழிகாட்டி பலகை வெளியூர் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜன 01, 2026 08:11 AM
நாமக்கல்: சாலைப்பணி முடியாமல் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டதால், வெளியூர் வாகன ஓட்டிகள் தடுப்பு வரை சென்று மீண்டும் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.நாமக்கல், முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, கடந்தாண்டு நடைமு-றைக்கு வந்தது. இந்த பஸ் ஸ்டாண்ட், புதிதாக அமைக்கப்பட்டு வரும் நகரின் சுற்றுவழிச்சா-லையில் அமைந்துள்ளது. இந்த சாலைப்பணி, புது பஸ் ஸ்டாண்ட் வரை மட்டுமே நிறைவ-டைந்துள்ளது. அதை தொடர்ந்து, மரூர்பட்டி, வீசாணம் உள்ளிட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதலைப்-பட்டி பைபாஸில் துவங்கும் அந்த சுற்றுச்சாலை, மரூர்பட்டி, சேந்தமங்கலம் சாலையில் வேட்டாம்
பாடி, துறையூர் சாலையில் கூலிப்பட்டி, திருச்சி சாலையில் வசந்தபுரம் உள்ளிட்ட பகுதி வழியாக அமைக்கப்படுகிறது.
இந்நிலையில், முதலைப்பட்டி-சேலம் பைபாஸ் சாலையிலும், புது பஸ் ஸ்டாண்ட் அருகேயும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், திருச்-சிக்கும், கொல்லிமலைக்கும் புதிய சாலையில் செல்லலாம் என்ற வகையில் அம்பு குறியுடன் உள்ளது.ஆனால், சாலைப்பணி நிறைவடையாததால், நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயே அந்த சாலையை தொடர முடியாதபடி தடுப்பு ஏற்படுத்-தப்பட்டுள்ளது. அந்த தடுப்பு ற்படுத்தியுள்ளதை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்-ளிட்ட பகுதியில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகள், பெயர் பல-கையை பார்த்து புது பஸ் ஸ்டாண்ட் வரை வந்து பாதை இல்லாததால் ரவுண்டானாவில் திரும்பி மீண்டும் மெயின் ரோட்டுக்கு செல்கின்றனர்.
அதனால், நேரம் விரயம் ஆவதுடன், தடுமாற்றம-டைகின்றனர். எனவே, சுற்றுச்சாலை பணி நிறைவுபெறும் வரை பெயர் பலகையில் இருக்கும் ஊர் பெயர்களை மறைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

